• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஒட்டன்சத்திரம் அருகே ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம்: முன்னாள் அமைச்சர் ஆய்வு..,

ByS.Ariyanayagam

Jul 28, 2026

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே முன்னாள் அமைச்சர் சக்கரபாணி ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானத்தில் ஆய்வு நடத்தினார்.
திண்டுக்கல் மாவட்டம் – ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி – கேதையுறும்பு ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானத்தை முன்னாள் அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது மாணவர்கள் உடல் நலத்துடன் விளையாடுவதற்கு ஓடுவதற்கும் பயிற்சிகள் செய்வதற்கும் மைதானத்தை தக்க முறையில் அமைக்க வேண்டும். பெண்கள் உடை மாற்றுவதற்கும் தனித்தனி அறைகள் அமைக்க வேண்டும். ஓய்வு எடுப்பதற்கும் அறைகள் அமைப்பது அவசியமாகும் என்பது குறித்தும் அவர் விளக்கினார். அவருடன் அதிகாரிகள் பங்கேற்றனர்.