• Sun. Jul 26th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

போதை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி..,

ByRadhakrishnan Thangaraj

Jul 26, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் வீத லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி இராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் திரு.K அண்ணாமலை அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்து அவர் உடல் அரோக்கியமாக இருக்க வேண்டி விட்டு பெரிய மாரி அம்மன் கோவில்திடலில் இருந்து காந்தி சிலை ரவுண்டானா பழைய பேருந்து நிலையம் வழியாக பஞ்சு மார்க்கெட் வரை சென்றது. இந்தப் பேரணிக்கு அண்ணாமலை நற்பணி மன்றத்தின் விருதுநகர் மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் எஸ் எஸ் ஜெயராமன் தலைமை வகித்தார்.

இந்த பேரணிக்கு இராஜபாளையம் முன்னாள் யூனியன் சேர்மன் பொன்னுத்தாய் முன்னில வகித்தார் பேரணி ஏற்பாடுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட அண்ணாமலை நற்பணி மன்ற முன்னாள் மாவட்ட செயலாளர் சக்திவேல் மற்றும் நகர தலைவர் தட்சணாமூர்த்தி வெங்கடேஷ் விருதுநகர் மாவட்ட அண்ணாமலை நற்பணி மன்ற முன்னாள் துணைத்தலைவர் அழகர்சாமி அண்ணமலை விருதுநகர்மேற்கு மாவட்ட இளைஞர் அணித்தலைவர் சரவண கார்திக் ஆகியோர் ஏற்பாட்டில் இந்தப் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னாள் அண்ணாமலை சரவணராஜா செங்கல்வராயன் டாக்டர் விக்ரம் உமாதேவி பத்மா தேவி பிரசன்னா முனிஸ்வரி அம்சவள்ளி கீதா தனம் உள்ளாமற்றும் வீத லீடர்ஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் போதையில்லா தமிழ்நாடு உருவாக்குவோம் என்ற கோஷங்களை எழுப்பி பேரணி நிறைவு செய்தனர்.