• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

தன் வாழ்க்கையை ஏ ஐ மூலம் ஒளிபரப்பு செய்த காட்சி கண்ணீர் விட்டு அழுத சமூக நலத்துறை அமைச்சர்..,

ByRadhakrishnan Thangaraj

Jul 25, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமையில் இராஜபாளையம் மக்களின் பிரச்சினை தீர்க்கும் விதமாக விஜய் விஜயம் என்ற செயலியை தூங்கி வைத்தார் மேலும் சாதனை செய்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

முன்னதாக பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானாவில் இருந்து தென்காசி சாலை வழியாக நிகழ்ச்சி நடந்த திருமண மண்டபம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பெண்களின் குரல் சமூகத்தின் பலன் என்ற கோஷங்கள் எழுப்பி பதாகைகளை கையில் ஏந்தி ஆண் பெண் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரன் துவங்கி வைத்து அவரும் கலந்து கொண்டு பேரணியாகச் சென்றார்

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி கடந்து வந்த பாதைகளை குறித்து ஏ ஐ மூலம் வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது இந்த காட்சியை தொண்டர்களுடன் அமர்ந்து பார்த்த அமைச்சர் ஜெகதீஸ்வரி கண்ணீர் விட்டு அழுதார் அவருக்கு தொண்டர்கள் ஆறுதல் கூறினர்கள்.