• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,

ByP.Thangapandi

Jul 24, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் சார்பில் உசிலம்பட்டி நகராட்சி மற்றும் எழுமலை பணிபுரியும் சுமார் 200 தூய்மை பணியாளர்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கு உரிமைகள் பாதுகாப்பு முன்னேற்றம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.,

இதில் உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய், உசிலம்பட்டி நகராட்சி பொறுப்புத் தலைவர் தேன்மொழி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், எழுமலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமுருகன் உள்ளிட்டோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.,

தொடர்ந்து தூய்மை பணியாளருக்கு நல வாரியம் உறுப்பினர் அட்டை பதிவு செய்தல், மருத்துவ காப்பீடு, பொது மருத்துவ பரிசோதனை, ஆதார் பதிவு திருத்தம், சாதி மற்றும் வருமானச் சான்று பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் நடைபெற்றன.,

இதற்கு முன்னதாக பேசிய உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய்,

தூய்மை பணியாளர்களாகிய நீங்கள் நாளுக்கு நாள் உசிலம்பட்டி பகுதி நகராட்சி பகுதி ரொம்ப தூய்மையாக மாறும் என்பது உங்களால் மட்டும் தான் முடியும், நீங்கள்தான் அதற்கு முக்கிய காரணம், நீங்கதான் அதற்கு உதவி செய்யனும், முதலமைச்சர் அவர்கள் நல்ல பொற்கால ஆட்சி கொடுத்துக் கொண்டுள்ளார் எனவும்.,நாங்கள் உங்களைப் பார்த்துக் கொள்கிறோம் மக்களை தூய்மையாக பார்த்துக் கொள்வது நீங்கள் தான் என பேசினார்.,

இதில் எழுமலை பேரூராட்சி உதவியாளர் ஆறுமுகம் மற்றும் செல்லப்பாண்டி, நாகராஜன், தொட்டப்ப நாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் இதயராணி மற்றும் உசிலம்பட்டி நகராட்சி மற்றும் எழுமலை பேரூராட்சி பணியாளர்கள், தொட்டப்ப நாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர், வருவாய்த் துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.,