• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திருமுருகன் திருக்கோவில் மண்டல சிறப்பு அபிஷேக பூஜை..,

ByP.Thangapandi

Jul 22, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புகழ்பெற்ற அருள்மிகு திருமுருகன் திருக்கோவில் அமைந்துள்ளது.,இக் கோவில் 12 ஆண்டுகளுக்கு பின்பு புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஜூன் மாதம் 4 ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.,

இந்நிலையில் இன்று உசிலம்பட்டி அருள்மிகு திருமுருகன் திருக்கோவில் 45 வது நாள் மண்டல சிறப்பு அபிஷேக பூஜை மற்றும் 108 சங்கு அபிஷேக பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது.,

தொடர்ந்து மூலவர் திருமுருகனுக்கு பால், தயிர்,சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது.,

தொடர்ந்து திருமுருகனுக்கு வெண்கல கவசம் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.,

திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து முருகனை வழிபட்டு சென்றனர்., தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.,