• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நீர் தேக்க தொட்டி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

ByK Kaliraj

Jul 21, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் பனையடிபட்டி ஊராட்சியை சேர்ந்தது வல்லம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள கிழக்கு தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இங்குள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. சீரமைக்கப்படாததால் குடிநீர் முழுமையாக ஏற்ற முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக அருகில் உள்ள கிராமங்களுக்கு காலி குடங்களுடன் செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது.

ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய நீர் தேக்க தொட்டி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.