புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் அரிமளம் ஒன்றியத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணும் பொருட்டு நமண சமுத்திரம் ஊராட்சி, ஆறங்கால் துவக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு சமைக்கப்பட்டுள்ள காலை உணவினையும், பள்ளிக்கு வருகை தந்துள்ள மாணவர்களின் வருகை பதிவேட்டினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் . மு. அருணா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர்( காவிரி குண்டாறு திட்டம்) வைத்தியநாதன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு. பிரகாஷ் அவர்கள், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் திருமதி. சித்ரா அவர்கள், அரிமளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. அருள் முருகானந்தம் அவர்கள், திரு பால் பிரான்சிஸ் அவர்கள், மற்றும் தலைமை ஆசிரியர், அனைத்து துறையைச் அலுவலர்கள் இருந்தனர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.




