• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அம்மனுக்கு தங்க முலாம் பூசப்பட்ட புதிய கவசம் அணிவித்து சிறப்பு வழிபாடு..,

ByPrabhu Sekar

Jul 18, 2026

பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பம்மல் லட்சுமி நாராயணன் நகரில் அமைந்துள்ள ஓம் சக்தி மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு தங்க முலாம் பூசப்பட்ட புதிய கவசம் அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆடி மாதத்தின் முதல் நாளையொட்டி ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட கழக செயலாளர் மின்னல் குமார் முன்னிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகியும் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான. பம்மல் லோகநாதன். ஏற்பாட்டில் அம்மனுக்கு தங்க முலாம் பூசப்பட்ட கவசம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி, தனது திருக்கரங்களால் தங்க முலாம் பூசப்பட்ட கவசத்தை ஆலயத்திற்கு வழங்கினார்.

பின்னர் அம்மனின் முழு திருமேனிக்கும் அந்த கவசம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. அம்மன் தங்க முலாம் பூசப்பட்ட கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.

திரளான பக்தர்கள் தீபாராதனையில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பம்மல் லயன் P.R.S. சரவணராஜ் உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.