• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஆயுதப்படை காவலர் நல சமுதாய கூடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முகமது பர்வேஸ்..,

ByS. SRIDHAR

Jul 18, 2026

புதுக்கோட்டை ஆயுதப்படை காவலர் நல சமுதாய கூடத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாவட்ட வழங்கல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், முன்னாள் படைவீரர் நலத்துறை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ஆகிய துறைகளின் மூலம் 721 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள், இன்று 18/07/2026 வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணா , மாவட்ட வருவாய் அலுவலர் .குழந்தைசாமி மாநகராட்சி ஆணையர் . காந்திராஜ் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு. பிரகாஷ் அவர்கள், உதவி ஆணையர்( தொழிலாளர்நலத்துறை) . கார்த்திகேயன் ,மாவட்ட மாற்றுத்திறனாளிகள்நல அலுவலர் . சூரிய பிரபு , மாவட்ட வழங்கல் அலுவலர் . ஷோபா அவர்கள்,

உதவி இயக்குனர்( முன்னாள் படைவீரர் நலன் ). விஜயகுமார் அவர்கள், மாவட்ட தொழில் மைய மேலாளர் திரு. கிரீஸ்சன் , மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு. நந்தகுமார் , உதவி இயக்குனர்( நி ல அளவை) திரு. பொன்னையா , ஏம்பல் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் .குமரேசன் ,மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.