• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் அரிமா சங்க நிர்வாகிகள் தேர்வு நலத்திட்ட உதவிகள்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நகர் அரிமா சங்க 33 வது ஆண்டு புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கிருஷ்ணா மஹாலில் நடந்தது. இந்த விழாவிற்குமுன்னாள் ஆளுநர் செல்லப்பாண்டி தலைமை தாங்கினார். புதிய நிர்வாகிகள் தேர்வில் தலைவராக பாலசுந்தரம், செயலாளராக குருசாமி, பொருளாளராக பாபநாசம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிதாக தேர்வு செய்ய நிர்வாகிகளுக்கு முன்னாள் ஆளுநர் அறிவழகன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சேவை திட்டங்களை முன்னாள் ஆளுநர் மோகன் சிங் துவக்கி வைத்தார். இதில் அன்பே கடவுள் பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகள் நல இல்லத்திற்கு அரிசி மூடைகள்,பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் மாவட்ட தலைவர் மெய்யப்பன், பூபாலன், ஜெயக்குமார்,வட்டாரத் தலைவர் விணுபாலன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.இந்த விழாவில் சங்க நிர்வாகிகள் கரி கோல்ராஜ்,குணசேகரன், காந்தி ராஜ், பாலாஜி,துர்கா, பொன் கமலக்கண்ணன், சிவசங்கர் பாபு சரவணன், ராமச்சந்திரன்,ராஜ பிரபு மற்றும்சோழவந்தான், அலங்காநல்லூர், நிலக்கோட்டை,உசிலம்பட்டி, மதுரை எலெக்ட், மதுரை பென்னி குக் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.இதில் அகில உலக லயன்ஸ் சங்கதிட்டங்களான பசிப்பிணியை போக்குதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் போன்ற திட்டங்களை செயல் படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் பொருளாளர் பாபநாசம் நன்றி கூறினார்.