• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளி கல்வி சீர் வழங்கிய நிகழ்ச்சி..,

ByP.Thangapandi

Jul 15, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி கிராமத்தில் அரசு கள்ளர் நடுநிலை பள்ளியில் சுமார் 4 ஆசிரியர்கள் பணி புரிந்து வரும் நிலையில் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.,

இந்நிலையில் இப்பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளியின் வளர்ச்சிக்காகவும் பள்ளி குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக கிராம மக்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளிக்கு தேவையான பீரோ, பேன், பிளாஸ்டிக் சேர், டேபிள், டேபிள் பேன், சுவர் கடிகாரம், பிரிண்ட் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு உபகரண பொருட்களை கல்வி சீராகவும், தாய்மாமன் சீராகவும் ஊர்வலமாக பட்டாசு வெடித்து பள்ளிக்கு வருகை தந்தனர்.,

பள்ளி ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து கிராம மக்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளை வரவேற்றனர்.,

அதனைத் தொடர்ந்து குழந்தைகளின் பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.,இதில் பங்கேற்ற பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.,

பள்ளி வளர்ச்சிக்காக கிராம மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளி கல்வி சீர் வழங்கிய நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,