• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் தினசரி காய்கறி சந்தையில் அமைச்சர் நிர்மல் குமார் திடீர் ஆய்வு..,

ByKalamegam Viswanathan

Jul 13, 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தினசரி காய்கறி சந்தைக்கு இன்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக அமைச்சருமான நிர்மல் குமார் அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சந்தையில் உள்ள ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று, வியாபாரிகளிடம் காய்கறி வரத்து, விற்பனை நிலவரம் மற்றும் அவர்களின் அன்றாடச் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார். மேலும், சந்தைக்குப் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடமும் அவர் நேரடியாகக் கலந்துரையாடினார்.