தேனி மாவட்டம் சின்னமனூர் செயற்பொறியாளர் (பகிர்மானம்) அலுவலகம் முன்பு சமூக ஆர்வலரான அப்தாகீர் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது தர்ணாவிற்கு காரணம் என்னவென்று அதிகாரிகள் கேட்டறிந்த போது கண்ணபுரம் கிராமம் கோடாங்கிபட்டியில் எல்வித ஆவணமும் இல்லாமல் 20 வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுத்ததாகவும் அங்கு 48 வீடுகள் இருக்கும் பட்சத்தில் 3 ஏக்கர் 19 செண்ட் புஷ்பம் வகையறாவுக்கு சொந்தமானது பட்டா மற்றும் ஆவணங்கள் அவர் பெயரில் தான் உள்ளது என்பதை தெரிவித்தார்.

மேலும் இதன் தொடர்பாக அப்பகுதியை சுற்றிலும் இரவு நேரங்களில் முறைகேடாக மின் கம்பங்களில் கொக்கி போட்டு கரண்ட் எடுத்து மோட்டார் ஓட்டி விவசாயம் செய்து வருவதாக புகார் தெரிவித்தார். இருந்த போதிலும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவேன் என்றார். அதற்கு தீர்வு காணும் வகையில் செயற்பெறியாளர் சமூக ஆர்வலரை அழைத்து தங்களது இக்கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறோம்.

ஆதலால் தங்களின் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு அதிகாரிகள் ஆய்வு செய்து பின்னர் தகவல் தெரிவித்ததுடன் நடவடிக்கை எடுப்போம் என்றார் காலஅவகாசம் வேண்டும் என்றார் ஏனெனில் இதில் முறைகேடு ஏதும் நடக்க வாய்ப்பில்லை என்றும் முறையாக ஆவணங்கள் இல்லாமல் இருந்து மின்சாரம் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி கூறினார்





