• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

தன்னை வெற்றி பெற செய்த வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி..,

ByK Kaliraj

Jul 7, 2026

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ தன்னை வெற்றி பெற செய்த வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன்படி அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்ன வள்ளிக்குளம், சூலக்கரை மேடு, சூலக்கரை, மாத்தி நாயக்கன்பட்டி, குல்லூர்சந்தை, பாலவநத்தம், பெரிய வள்ளிக் குளம், உள்ளிட்ட பகுதியில் தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த தொகுதி மக்களுக்கு எப்போதும் நான் நன்றி உணர்வுடன் இருப்பேன். எதிர்க்கட்சியாக இருந்தாலும் உங்களுக்கு வேண்டிய பணிகளை என்னால் முடிந்த அளவிற்கு தொடர்ந்து செய்து கொடுப்பேன். உங்களோடு இருந்து உங்களுக்கு தேவையான பணிகளை நான் செய்து கொடுப்பேன் என கூறினார்.