• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

குடும்பத்தோடு சாப்பிடனும்னா பர்சனல் லோன் தான் போடணும்..!

ByKalamegam Viswanathan

Jul 7, 2026

மதுரை மாநகர் ஐயர் பங்களா கண்ணனேந்தல் சந்திப்பு அன்பு நகர் பகுதியில் உள்ள தனியார் ( மருதீஸ்வரர் ) என்ற Luxury உணவகம் செயல்பட்டுவருகிறது

இந்த உணவகத்தில் நேற்று முன்தினம் சாப்பிட சென்ற வாடிக்கையாளர் ஒருவர் ரவா தோசை சாப்பிட்டுவிட்டு பில்டர் காபி குடித்துள்ளார்

இதனையடுத்து உணவிற்கான பணத்தை செலுத்துவதற்காக பில் வாங்கி பார்த்த போது அதில் ரவா தோசை ஒன்று 189 ரூபாய் என பெங்களூரு நகரில் உள்ள விலை போல ரேட் போடப்பட்டிருந்தது.

இதே போன்ற ஒரு பில்டர் காபி விலை 69 ரூபாய் எனவும் ஒட்டுமொத்தமாக இரண்டும் சேர்த்து 258 ரூபாய் பில் போடப்பட்டது.

மேலும் அதே பில்லில் Staff Contribution 4% Optional என டிப்ஸ்க்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.

அதில் 10 ரூபாய் 32 பைசா எனவும் ஒட்டுமொத்தமாக டிப்ஸோடு சேர்ந்து 268 ரூபாய் 32 பைசாவிற்கு டிப்ஸ்க்கும் சேர்த்து 5 சதவிகித GST வரி யாக மொத்தம் 13ரூபாய் 42 பைசா போடப்பட்டிருந்தது

.இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் பணத்தை செலுத்தி விட்டு தற்போது இது குறித்த பதிவை பில்லுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து உணவக தரப்பில் விளக்கம் கேட்டபோது தாங்கள் டிப்ஸ் என்பதை கட்டாயப்படுத்தி கேட்பதில்லை ஆப்ஷனல் என்கின்ற அடிப்படையிலேயே கேட்டுள்ளோம் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம் எனவும் தெரிவித்தனர்

டிப்ஸ் எப்படி ஜிஎஸ்டி போடுவீர்கள் என்று கேள்வி எளிப்பதற்கு பதில் கிடைக்கவில்லை