• Wed. Jul 1st, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுநியமன ஆணை வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்..,

ByP.Thangapandi

Jun 30, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்., கல்வியாண்டின் இடையிலேயே இன்று பணி ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி மறுநியமன ஆணை வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,

மேலும் தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும்., ஆசிரியர் தகுதி தேர்வை காரணம் காட்டி நிரப்ப மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இன்று முதல் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி மறுநியமன ஆணை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநரும், அமைச்சரும் உறுதி அளித்திருந்த சூழலில்., இன்று அலுவலக பணி நேரம் முடிந்த பின்னும் தற்போது வரை பணி மறுநியமன ஆணை வழங்கவில்லை என்றும் ஆணை வழங்கும் வரை தங்களின் காத்திருப்பு போராட்டம் தொடரும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.,