• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

போக்குவரத்து நெருக்கடியை குறைக்க தார் சாலை அமைக்க கருப்பையா எம்எல்ஏ ஆய்வு..,

ByKalamegam Viswanathan

Jul 1, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாகவும் சோழவந்தானிற்குள் வரும் அதிகப்படியான வாகனங்கள் காரணமாகவும்
நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் சோழவந்தானின் புறநகர் பகுதியில் சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் சோழவந்தான் வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள தேனூர் கால்வாயில் ஆய்வு மேற்கொண்ட கருப்பையா எம்எல்ஏ தேனூர் கால்வாயானது 100 அடி அகலம் இருந்ததாகவும் தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக 50 அடிக்கும் கீழ் குறைந்து விட்டதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறிய நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றியும் மற்றும் 100 அடி அகலத்திற்கு கால்வாயை அகலப்படுத்தி வைத்தியநாதபுரம் முதல் ஆர் எம் எஸ் காலனி வரை தார் சாலை அமைத்து சோழவந்தான் நகருக்குள் வரும் வாகனங்களை அந்த தார் சாலை வழியாக புறநகர் பகுதிக்கு செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக தேனூர் கால்வாய் பகுதியில் கருப்பையா எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்

இந்த சாலை அமைப்பதன் மூலம் வாடிப்பட்டியில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் கரட்டுப்பட்டி கொடைரோடு வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சோழவந்தான் வழியாக திருமங்கலம் உசிலம்பட்டி மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் இந்த புறநகர் சாலையை பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இருப்பதால் சோழவந்தான் நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஆகையால் வைத்தியநாதபுரம் முதல் ஆர் எம் எஸ் காலனி வரை உள்ள தேனூர் கால்வாயை அகலப்படுத்தி தார் சாலை அமைக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் கருப்பையா எம்எல்ஏவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தேனூர் கால்வாயில் ஆய்வு மேற்கொண்ட கருப்பையா எம்எல்ஏ உடன் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கொரியர் கணேசன், ராஜேஷ் கண்ணா அரியூர் ராதாகிருஷ்ணன் வழக்கறிஞர் தியாகு தாமு கேபிள் மணி முல்லை சக்தி ஜெய்பிரகாஷ் துரைக்கண்ணன் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.