• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..,

ByP.Thangapandi

Jun 30, 2026

காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கும் விவகாரத்தில் தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியின் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற சூழலில்.,

தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளரை
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம் செய்வதற்கு அரசியல் கட்சியல் கட்சியினரிடையே எதிர்ப்புகள் கிளம்பியுள்ள சூழலில்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி சாலை, மதுரை சாலை, பேரையூர் சாலை, வத்தலகுண்டு சாலை மற்றும் உசிலம்பட்டியின் முக்கிய வீதிகள் உள்ளிட்ட நகர் பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்ட்டரால் பரபரப்பு.,

இதில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் நியமித்தது ஒரு போதும் ஏற்க முடியாது.,

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் வேலையில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதியாக நியமிப்பதா? கண்டனத்துடன் நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி என் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்ட போஸ்ட்டரால் பரபரப்பு ஏற்பட்டது.