• Sun. Nov 15th, 2026

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா..,

ByKalamegam Viswanathan

Nov 15, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பாக 18 வார்டு பகுதிகளில் மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு செயல் அலுவலர் தேவி தலைமை தாங்கினார். சுகாதார பணி ஆய்வாளர் ஜெஸ்ஸி முன்னிலை வகித்தார்.

பணியாளர் செல்வமணி வரவேற்றார்.சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேட்டை விவேகானந்த மெட்ரிகுலேஷன் பள்ளி மெயின் ரோட்டில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார். இதில் பேரூராட்சி பணியாளர்கள் அசோக்குமார், பூவலிங்கம், பாண்டி, பாலமுருகன்,விக்னேஷ், கார்த்தி உட்பட தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், டெங்கு விழிப்புணர்வு குழு உட்பட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள்பலர் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மரக்கன்று மற்றும் நோட்புக் எழுது பொருள் ஆகியவற்றை கருப்பையா எம்எல்ஏ வழங்கினார். சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர்.