• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பள்ளியில் தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா..,

ByKalamegam Viswanathan

Jun 30, 2026

சோழவந்தான் சிஎஸ்ஐ தொடக்கப் பள்ளியில் 36 ஆண்டுகால ஆசிரியர் பணியை நிறைவு செய்த தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது பள்ளியின் நிர்வாகி அருட்தந்தை எபினேசர் துரைராஜ் தலைமை தாங்கினார்.

சோழவந்தான். பேரூராட்சி தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். விழாவில் ஆசிரியைஏஞ்சலின் சுகந்தி வரவேற்றார். ஆசிரியைபிரேம்குமாரி விழா நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். ஆசிரியை வனிதா சாந்தகுமாரி, பிரேமா அன்ன புஷ்பம், சோழவந்தான் பேரூராட்சி முன்னாள் தலைவர் எம்.கே.முருகேசன், வட்டார கல்வி அலுவலர்கள் ஜான் மோசஸ் பெஞ்சமின், அகிலத்து இளவரசி ராஜ்குமார் ,வார்டு கவுன்சிலர் வக்கீல் சத்யபிரகாஷ் , மதுரை ராமநாதபுரம் பேராயத்தின் முன்னாள் பொருளாளர்கவிஞர் ஆனந்தராஜ்,தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பாரதி சிங்கம்,சோழவந்தான் காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் பென்சாம், சோழவந்தான் அனைத்து வியாபாரிகள் நலசங்கத்தின் செயலாளர் ஆதி. பெருமாள், சோழவந்தான் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக செயலாளர் மாணிக்கம் மற்றும் தலைமை ஆசிரியர்கள்,ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பு செய்தார்கள்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு நினைவு பரிசுகள் வழங்கிஆசிரியர்கள் மரியாதை செலுத்தினார்கள். உதவி ஆசிரியை திவ்யா நன்றி கூறினார்.