• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு!

​மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

​இந்த போலியோ சொட்டு மருந்து முகாமில், 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்துகள் வழங்கப்படுகின்றன.

​அதன்படி தேனி மாவட்டம் கம்பம் நகரில் அமைந்துள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

​இந்தச் சிறப்பு முகாமில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டு, போலியோ சொட்டு மருந்து முகாமினைத் துவக்கி வைத்தனர்.

​இம்முகாமிற்கு கம்பத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து, ஆர்வத்துடன் போலியோ சொட்டு மருந்து செலுத்திச் சென்றனர்.

​நடைபெற்ற இந்தச் சிறப்பு முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் முருகன், நகர்ப்புற நலவாழ்வு மையத்தின் மருத்துவர் மீனாட்சி சுந்தரம், சித்த மருத்துவ அலுவலர் சிராஜுதீன் உள்ளிட்ட மருத்துவத்துறை சார்ந்த அதிகாரிகளும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.