• Sat. Jun 27th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி..,

BySeenu

Jun 27, 2026

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு மாநகர காவல் ஆணையாளர் டாக்டர் என். கண்ணன், ஐ.பி.எஸ் அவர்கள் தொடங்கிவைத்தார்.

போதைப்பொருளற்ற சமுதாயத்தை உருவாக்கும் உன்னத நோக்கில், கோயம்புத்தூர் கிராஸ் கட் சாலையில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமி அதன் மாணவர் நல வாரியம் மற்றும் மாணவர் பேரவை உறுப்பினர்களுடன் இணைந்து, சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையாளர் கண்ணன் தொடங்கிவைத்தார். இப்பேரணி போதைப்பொருளுக்கு இல்லை என்று சொல்வோம், ஒன்றிணைந்து போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்” என்ற முழக்கத்துடன் நடைபெற்றது.

இப்பேரணியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அகாடமி பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். போதைப்பொருளின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், விழிப்புணர்வு பதாகைகள், சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட ஆட்டோக்கள் மூலம் காந்திபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

பேரணியின் முடிவில், போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது. மாநகர காவல் ஆணையாளர் டாக்டர் என். கண்ணன், ஐ.பி.எஸ் அவர்கள் வாசிக்க, திரண்டிருந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் என். கண்ணன், மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர் திருமதி. ஜெகதீஸ்வரி, R.S. அருண், சங்கர் ஐ.ஏ.எஸ்.அகாடமி கோவை கிளை தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.