• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

விராலிமலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

Byமுகமதி

Jun 27, 2026

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் விராலிமலை செக் போஸ்ட் அருகில் மத்திய பா ஜ க அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகள், தேர்வுகள் ரத்து செய்யப்படுதல், பணியாளர்கள் ஆட்சேர்ப்பில் தாமதம், வேலை வாய்ப்பின்மை, கல்வி அமைப்பின் கட்டமைப்பு குறைபாடுகள், மாணவர்கள் தற்கொலை மற்றும் நீட் தேர்வுக் குளறுபடிகளுக்குக் காரணமான ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும் பிரச்சார கூட்டமும் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி வடக்கு தலைவர் DD. பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பேச்சாளர் குமரி மகாதேவன் கலந்து கொண்டு மத்திய அரசின் நிர்வாக சீர்கேடுகள் குறித்து பேசினார். இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆலங்குடி தமிழ்ச்செல்வன், அழகர்சாமி, வட்டாரக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் சட்டையப்பன், தமிழ்ச்செல்வன், ஏழுமலை, வீரக்குமார், மதிமாறன், மாநில பொதுக் குழு உறுப்பினர் அன்பழகன், அன்னவாசல் செல்வராஜ், சுப்பிரமணியன், தங்கவேலு, ஆவூர் பன்னீர், அப்துல் கரீம், சஞ்சய் காந்தி, மாவட்டத் துணைத் தலைவர் வேங்கை அருணாசலம், வட்டாரக் காங்கிரஸ் தலைவர் சூர்யா பழனியப்பன், ரஹீம், முகமதுகனி, ஜெய வடிவேல், கருப்பசாமி, காந்தி, அனில் ராஜ், பாலாஜி கோபி உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.