• Sat. Jun 27th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் அலட்சியத்தால் ஏற்படும் தொடர் பாதிப்பு !!!

BySeenu

Jun 27, 2026

கோவை மாநகராட்சி பகுதிகளில் பணிகள் முடிவடைந்தும் சாலைகள் சரி வர மூடப்படாததன் விளைவாக, வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடைக் குழியில் கனரக லாரி ஒன்று சிக்கிக்கொண்ட சம்பவம் மீண்டும் அரங்கேறி உள்ளது.

கோவை, வெள்ளக்கிணறு முக்கியச் சாலையில் கடந்த சில நாட்களாகப் பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெற்று வந்து உள்ளன.

பணிகள் தற்காலிகமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தோண்டப்பட்ட அந்தப் பிரம்மாண்ட பள்ளங்களை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊழியர்கள் உரிய முறையில் தார் மற்றும் ஜல்லிக்கற்களைக் கொண்டு மூடாமல், வெறும் மண்ணை மட்டும் கொட்டி அரைகுறையாக அப்படியே போட்டுச் சென்று உள்ளனர்.

​இந்நிலையில்,அந்தச் சாலை வழியாக அதிக எடையுடன் வந்த கனரக லாரி ஒன்று, அதை கடக்க முயன்ற போது, மண்ணுக்குள் சக்கரம் இறங்கி அப்படியே ‘லாக்’ ஆகியுள்ளது.

லாரியின் பின் சக்கரங்கள் பாதாள சாக்கடைக் குழிக்குள் தடாலடியாக இறங்கி, வண்டி ஒருபுறமாகச் சாய்ந்தது.

பருவமழை காலம் நெருங்கி வரும் வேளையில், மாநகராட்சி நிர்வாகம் இந்த ‘கிரவுண்ட் ரியாலிட்டி’யைப் புரிந்து கொண்டு, பாதாள சாக்கடைப் பள்ளங்களைச் சீராக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையேல் பெரிய விபத்துகள் நேரிடும் எனப் பொதுமக்கள் எச்சரித்து உள்ளனர்.