புதிய பொறுப்பு: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, தென்மண்டலம் – மதுரையின் துணை இயக்குநராக திரு. K. குமார் (M.Sc., B.Ed., A.Dip.F.E., (NFSC)) அவர்கள் 26.06.2026 அன்று முற்பகல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முந்தைய பணி: இதற்கு முன்னதாக இவர் கடலூர் மாவட்டத்தில், மாவட்ட அலுவலராகப் பணியாற்றி வந்தார். தற்போது பதவி உயர்வின் மூலம் தென்மண்டல துணை இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.
உடனடி நடவடிக்கை: பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தென்மண்டலத்தைச் சார்ந்த மதுரை, தேனி, விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில், தீயணைப்பு மற்றும் மீட்பு அழைப்புகளில் துரிதமாகவும், விரைவாகவும் செயல்பட அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.



