• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

கொலை மிரட்டல் செய்யும் கல்குவாரி குண்டர்கள்!

ByKalamegam Viswanathan

Jun 26, 2026

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிராயன்பட்டி ஊராட்சி க.புதூர் அருவிமலை அடிவாரத்தில் விதியை மீறி செயல்படும் கல்குவாரியை மூடக்கோரி க.புதூர்,களப்பாறை,பால்குடி,அய்வத்தான்பட்டி ஆகிய ஊர் மக்கள் கடந்த 15.06.2026 அன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

அதன் விளைவாக மேலூர் வட்டாட்சியர் தற்காலிமாக கல்குவாரியை 15 நாட்களுக்கு நிறுத்தி வைக்கிறேன் என்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து அறிக்கை கொடுத்த பின்பு முழுமையாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார். கல்குவாரி மூடியதில் இருந்து கல்குவாரி குண்டர்கள் போராட்டத்தில் முன்னணியாக செயல்பட்டவர்களையும்,பொதுமக்களையும் கொலை மிரட்டல் செய்யும் கொடுமை நிகழ்கிறது.

பெரும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கல்குவாரி குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும்,பாதுகாப்புக்கோரியும் பொதுமக்கள் இன்று 25.06.2026 கொட்டாம்பட்டி சார்பு ஆய்வாளர் அவர்களிடம் மனு கொடுத்தார்கள். எனவே தமிழ்நாடு கனிம வளத்துறை அமைச்சர் கச்சிராயன்பட்டி க.புதூர் அருவிமலை அடிவாரத்தில் உள்ள கல்குவாரியை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு காவல்துறை பொதுமக்களை கொலை மிரட்டல் செய்யும் குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.