• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

பேக்கரியின் பூட்டை உடைத்து திருட்டு: கண்காணிப்பு கேமரா அமைத்த பின்பும் மீண்டும் திருட்டு..,

BySeenu

Jun 26, 2026

சூலூர் அருகே வெங்கடாபுரம் பிரிவு பகுதியில் பேக்கரியின் பூட்டை உடைத்து கண்காணிப்பு கேமராக்களை துணியால் மூடி மர்ம நபர்கள் வியாழக்கிழமை அதிகாலை துணிகிற திருட்டில் ஈடுபட்டுள்ளனர். நீலம்பூர் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை துவக்கி உள்ளனர்.

சூலூர் அருகே வெங்கடாபுரம் பகுதியில் சிங்கம்புணரியைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் கடந்த 20 வருடங்களாக செல்வாபேக்கரி எனும் கடை நடத்தி வருகிறார். கடந்த வாரம் வியாழக்கிழமை இவரது பேக்கரியில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் அங்கு இருந்த 2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இது பற்றி போலீசாருக்கு தமிழரசன் தெரிவிக்கவில்லை. வீண் அலைச்சல் ஏற்படும் என கூறி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் விட்டுவிட்டார். நண்பர்களின் அறிவுரையை அடுத்து திங்கட்கிழமை கண்காணிப்பு கேமராக்களை பேக்கரி முழுவதும் பொருத்தியுள்ளார்.

இந்நிலையில் வியாழக்கிழமை (25 ஆம் தேதி)அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பேக்கரியை நின்று நோட்டமிட்டு விட்டு பேக்கரி பூட்டை இரும்பு ராடால் உடைத்துள்ளனர். ஆனால் பேக்கரியின் சென்டர் லாக்கை உடைக்க முடியவில்லை. அங்கு கண்காணிப்பு கேமராக்களை அங்கு இருந்த துணிகளை கொண்டு மூடி மறைத்தும் கேமராக்களின திசையை மாற்றியும் வைத்துள்ளனர். பின்பு திருட்டு வேலையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து நீலாம்பூர் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் திருட்டு பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சூலூர் அருகே சிந்தாமணிபுதூர் பகுதியில் 7 கடைகளை உடைத்து திருடிய சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன்பே நீலாம்பூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட  பகுதியில் மீண்டும் திருட்டு சம்பவங்கள் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் மத்தியில்அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.