• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சிபியோ ஆதரவற்றோர் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி..,

ByK Kaliraj

Jun 23, 2026

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் சிபியோ ஆதரவற்றோர் உண்டு உறை விடப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றிக்காக மாவட்ட கழக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சருமான ஜெகதீஸ்வரி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தொடர்ந்து ஆதரவற்றோர் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் படிப்பு மற்றும் வசதிகள் பற்றியும் தொடர்ந்து சிபியோ நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து பட்டாசு விபத்தில் இறந்த ஆதரவற்ற குழந்தைகளை பராமரிப்பது கல்வி மற்றும் முன்னேற்றம் குறித்து கேள்விப்பட்டதும் நிறுவனத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தார். தொடர்ந்து அவர் பள்ளி சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் மற்றும் ஆதரவுகளையும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.