• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி..,

ByPrabhu Sekar

Jun 23, 2026

தாம்பரம் அடுத்த இரும்புலியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான லட்சுமி ராஜா கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவிப் பொருட்களை வழங்கினார். அப்போது, முதலமைச்சர் விஜய் மீது தாங்கள் கொண்டுள்ள அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவரது உருவப்படங்களை வரைந்து வாழ்த்து தெரிவித்தனர்.

மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் மற்றும் வாழ்த்து மடல்களை வழக்கறிஞர் லட்சுமி ராஜாவிடம் நேரில் வழங்கினர். மாணவர்களின் படைப்புகளை பாராட்டிய லட்சுமி ராஜா, அனைத்து ஓவியங்களையும் மற்றும் வாழ்த்து மடல்களையும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தபால் மூலம் அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார்.

இதையடுத்து மாணவர்களிடமிருந்து ஓவியங்களை பெற்றுக்கொண்டார்

இந்த நிகழ்வு மாணவர்களின் கலைத்திறமையையும், முதலமைச்சரின் மீதான அவர்களின் அன்பையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.