• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கைதி காவல்துறையிடம் தப்பி ஓட்டம் !!!

BySeenu

Jun 21, 2026

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு வந்த போது கர்நாடகா போலீசாரிடம் இருந்து கைது தப்பி ஓடினார்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் மகன் ராகவன். இவர் மீது தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது. இதில் திருட்டு வழக்கு தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு ராகவன் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவரது வழக்குகள் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு நீதிமன்றத்தில் திருட்டு வழக்கு விசாரணைக்கு ஆஜர்ப்படுத்துவதற்காக ராகவன் கர்நாடகா போலீசார் கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்துச் சென்றனர். அங்கு நீதிமன்றத்தில் பிறகு ராகவனை நேற்று முன்தினம் இரவு திம்பம், பவானிசாகர், அன்னூர் வழியாக கோவை நோக்கி அழைத்து வந்தனர். அப்பொழுது அன்னூர் அருகே பச்சாகானூர் பகுதிக்கு வந்த போது ராகவன் இயற்கை உபாதை செல்ல வேண்டும் என்று கூறி உள்ளார். அதை நம்பிய போலீசார் வாகனத்தை நிறுத்தினர். ராகவன் இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கைவிலங்குகளை அவிழ்த்து விட்டதாக தெரிகிறது. அப்பொழுது திடீரென வாகனத்தில் இருந்து குதித்த ராகவன் காட்டுப் பகுதிக்குள் ஓட தொடங்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கர்நாடகா மாநில போலீசார் ராகவனை பிடிக்க துரத்திச் சென்றனர். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை, அது இரவு நேரம் என்பதால் ராகவன் வனப்பகுதி வழியாக ஓடித் தப்பினார். இது குறித்து புகாரின் பேரில் அன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கைதி ராகவனை வலை வீசி தேடி வருகின்றனர்.