தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகில் உள்ள ராசா பட்டி கிராமத்தில் பாலாஜி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த பாலாஜி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் படுகாயம் அடைந்த பலர் பட்டாசு ஆலைக்கு சொந்தமான வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர்.

சாத்தூர் அரசு மருத்துவமனை விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுமார் 20-க்கும் மேற்பட்டோருக்கு முதலுதவி மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயம் அடைந்தவர்கள் பெரும்பாலும் நத்தத்துப்பட்டி மாசார்பட்டி எம் நாகலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இதில் அதிகமான பெண்கள் அடங்குவர்.




