• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

மரம் நடு விழா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

ByK Kaliraj

Jun 20, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பெரியார் நகர் சிறுவர் பூங்காவில் தனியார் தொண்டு நிறுவன அமைப்பினர் தங்களது நிறுவனத்தின் 15 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டும் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டும் மரம் நடுவிழா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சாத்தூர் நகர்மன்ற தலைவர் குருசாமி நகராட்சி ஆணையாளர் ஜெகதீஸ்வரி மற்றும் தனியார் தொண்டு நிறுவன அமைப்பினர் சிலம்பம் கலைக்கூட ஆசான் மற்றும் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய தொண்டு நிறுவன அமைப்பினர் பொதுமக்கள் ஆர்வத்துடன் விலங்குகளை வளர்ப்போம் என்ற எண்ணத்தில் மாடுகளை சாலைகளில் மேய்ச்சலுக்கு விடுவது பெரும் ஆபத்தை விளைவிக்கிறது என்றும் அதேபோன்று நாய்களை விருப்பப்பட்டு வளர்த்து பின்பு பராமரிக்க முடியாமல் தெருக்களை விட்டு விடுவதால் பல்வேறு இடர்பாடுகளும் பொது மக்களுக்கு ஆபத்தையும் விளைவிக்க கூடிய வகையில் அமைகிறது இதனால் பொதுமக்கள் முறைப்படி நாய்களை வளர்க்க அதற்கு லைசன்ஸ் பெற்று வளர்க்க வேண்டும் என்று ஆர்வத்துடன் நாய்களை வளர்த்து தெருவில் விட்டு விடுவதால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து நாகர்கோவில் சேர்மன், ஆணையாளர், மற்றும் தொண்டு நிறுவனம் அமைப்பினர் மாணவர்கள் என அனைவரும் அப்பகுதியில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.
மேலும் பிளாஸ்டிக் ஆல் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைத்து பிளாஸ்டிக் ஒழிப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து சிலம்பக் கலைக்கூட மாணவர்கள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையான சிலம்ப கலைகளை சுற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.