விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலை அமைந்துள்ளது சித்ரா ( ஹாஸ்பிடல்ஸ் ) மருத்துவமனை இந்த மருத்துவமனையில் யூனிகஸ்பிட் அயோர்டிக் ஸ்டெனோசிஸ் என்று அழைக்கப்படும் அரிய பிறவி இருதய குறைபாடு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு சித்ரா மருத்துவமனை நிர்வாகியும் மருத்துவருமான கோபால முருகன் தலைமையிலான 20 பேர் கொண்ட முருத்துவ குழுவினர் மயக்க மருந்து அறுவை சிகிச்சை இல்லாமல் 26 வயதான இளம் கர்ப்பிணி பெண் 26 வார கர்ப்ப காலத்தில் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த இந்த பெண்ணிற்கு கார்டியாக் கேத் லேப் குழுவினர் நவீன கேத் லேப்பியல் காலில் உள்ள ஒரு சிறிய நரம்பு வழியாக ஒரு மெல்லிய கருவியை இதயம் வரை செலுத்தி அயோர்டிக் வால்வு வை நுட்பமாக சரி செய்துள்ளனர்.

இந்த சிகிச்சையில் மார்பில் எந்த ஒரு அறுவை சிகிச்சையோ வழியோ இல்லாமல் ரத்த இழப்பு இல்லாமல் சரி செய்யப்பட்டு கருவில் இருந்த குழந்தைக்கோ தாய்க்கோ எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இந்த சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவரும் நிர்வாகியுமான மருத்துவர் கோபால முருகன் கூறும் பொழுது எங்களது மருத்துவக் குழுவை சேர்ந்த டாக்டர் ஞானகுரு டாக்டர் பிந்தியா டாக்டர் முகமது அபூபக்கர் மற்றும் மருத்துவர் சித்ரா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பெரிய முயற்சி எடுத்து இந்த சாதனை செய்துள்ளோம் உலக அளவில் எந்த மருத்துவராலும் செய்ய முடியாததை நாங்கள் செய்து முடித்துள்ளோம்.

எங்கு சென்றாலும் குழந்தையே கலைத்துவிட்டு தான் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும் என்று கூறப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை இல்லாமல் மயக்க மருந்து கொடுக்காமல் யூனிகஸ்பிட் அயோர்டிக் ஸ்டெனோசிஸ் என்று அழைக்கப்படும் அரிய பிறவி இருதய குறைபாடு நோயை சரி செய்துள்ளோம்.

இன்று கருவுற்ற பெண்ணும் குழந்தையும் நலமாக உள்ளனர் இன்னும் சில வாரங்களில் குழந்தையை பெற்றெடுப்பார். இதற்காக வேறு எந்த சிகிச்சையும் அவர் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுக்க அதற்கு தேவையான சிகிச்சை மற்றும் பெற்றால் போதும் என தெரிவித்தார்.




