• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

மதுரையில் கெட்டுப்போன 1200 கிலோ எடையுள்ள ஆடு, கோழி இறைச்சி பறிமுதல்..,

ByKalamegam Viswanathan

Jun 17, 2026

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் மோயிசன், 57, என்பவர் மோயிசன் மட்டன் கடை என்ற பெயரில் கெட்டுப்போன ஆடு, கோழி இறைச்சியை விற்பனை செய்வதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சிவராம பாண்டியன் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். கடையில் இருந்த மாநகராட்சியின் சீல் வைக்கப்படாத ஆட்டு இறைச்சி, முறையாக பதப்படுத்தப்படாத ஆடு, கோழி இறைச்சி உட்பட மொத்தம் 1200 கிலோ எடையுள்ள இறைச்சி பறிமுதல் செய்து ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டு அழிக்கப்பட்டது. கடை பூட்டப்பட்டது.

ஆட்டு இறைச்சியின் எடையை அதிகரிப்பதற்காக சிரிஞ்சில் தண்ணீர் நிரப்பி ஊசி மூலம் செலுத்தப்பட்டதாகவும் அதிகாரி தெரிவித்தார். ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.