மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கேசம்பட்டியில் உள்ள அங்கான்வாடி மையம் பழுதடைந்த நிலையில் புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும் என்று கடந்த ஆண்டுகளில் மதுரை மாவட்ட ஆட்சியரிடமும்,அரசு அலுவலர்களிடமும் மனு கொடுக்கப்பட்டது.

முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார் கொடுக்கப்பட்டது. பலமுறை கிராம சபைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருந்தும் சரியான நடவடிக்கை இல்லை.
கட்டிடம் பழுதடைந்ததால் அபாயகரமான சூழலை தவிர்க்க தற்பொழுது 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் நலன் கருதி 4 மாதங்களாக தனியார் கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு குழந்தைகளுக்கு போதுமான வசதிகள் இல்லாமல் உள்ளது.

எனவே குழந்தைகள் நலனை மனதில் கொண்டு மதுரை மாவட்ட ஆட்சியரும், தமிழ்நாடு அரசும் கேசம்பட்டியில் அங்கன்வாடி மையம் கட்டிடம் புதிதாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்!!




