மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பெருங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வளையப்பட்டி கிராம மந்தை அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் தலைய மற்றும் முதுகில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இச்சம்பவம் அறிந்து உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்டவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சின்ன கருப்பு என்பவரின் மகன் அம்ச கொடி (38) திருமணம் ஆகாத இவர் வெளியூரில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருக்கும் இதே ஊரை சேர்ந்த கார்த்தி என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ஜல்லிகட்டு மாடு வாங்கியதில் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு மற்றும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இதனால் வெளியூர்களில் தங்கி வேலை செய்து வந்த அம்சகொடி அவ்வப்போது ஊருக்கு வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய அம்சச் கொடியை ஊரின் மந்தையில் வைத்து போதையில் இருந்த வலையபட்டியைச் சேர்ந்த குமார் மகன் கார்த்திக் ராஜா (26), வலையபட்டியைச் சேர்ந்த செல்லையா மகன் நந்து (21), மற்றும் பெருமாள் நகரைச் சேர்ந்த பாண்டி மகன் குருவி மணிகண்டன் ஆகியோர் அம்ச கொடியிடம் தகராறில் ஈடுபட்டு மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தியால் அம்ச கொடியை தலை மற்றும் முதுகு பகுதியில் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது அம்சகொடி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

பின்னர் அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பெருங்குடி போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். போலீசாரையும் தேடுதல் வேட்டையில் மண்டேலா நகர் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த கார்த்திக் ராஜா, நந்து, குருவி மணிகண்டன், விஜய், நாகேந்திரன் ஆகிய ஐவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை சம்பவம் அரங்கேரி அடுத்த 18 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.





