• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் மலை போல் தேங்கும் குப்பைகளால் சுகாதார கேடு..,

ByKalamegam Viswanathan

Jul 27, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக குப்பைகள் அல்லாததால் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மலை போல் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பேட்டை சந்தன மாரியம்மன் கோவில் பகுதி ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதி சப்பானி கோவில் தெரு பகுதி ஆர்எம்எஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பல நாட்களாக குப்பைகள் அல்லாத நிலையில் மலை போல் தேங்கி கிடக்கிறது மேலும் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் தேங்கி கிடக்கும் குப்பைகள் மீது மேலும் மேலும் குப்பைகளை வந்து கொட்டுவதால் தேங்கும் குப்பைகள் மூலம் துர்நாற்றம் வீசி மிகப்பெரிய அளவில் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பேரூராட்சியில் நிரந்தர பணியாளர்கள் தற்காலிக பணியாளர்கள் என துப்புரவு பணியாளர்கள் பலர் உள்ள நிலையில் அவர்கள் தினசரி குப்பைகளை அள்ளும் பணிகளை மேற்கொள்கிறார்களா? அவர்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் தேங்கும் குப்பைகளை அல்ல நடவடிக்கை மேற்கொள்கிறார்களா என தெரியாத நிலையில் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. ஆகையால் தேங்கி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தி பொதுமக்களை தொற்று நோயிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.