கொடைரோடு அருகே வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் உட்பட 2 பேர் கைது – 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட எஸ்.பி.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்

நிலக்கோட்டை DSP.இளஞ்செழியன் தலைமையில் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் சத்யா, சார்பு ஆய்வாளர் சவட முத்து மற்றும் காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது,
பள்ளப்பட்டி பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த கருப்பையா(46), மகன் மதுரையை சேர்ந்த மணிமேகலை(41) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




