திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகேயுள்ள சிலுக்குவார்பட்டியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 8 மாணவ – மாணவிகளை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு குல்லலக்குண்டு ஊராட்சியில் உள்ள பொட்டி செட்டிபட்டிக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது.

அந்த ஆட்டோ மாலையகவுண்டன் பட்டி பிரிவு அருகே வந்த போது நிலை தடுமாறி தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் காயம் அடைந்த பொட்டி செட்டி பட்டி பகுதியைச் சேர்ந்த திலகா வயது 13), சரண்யா ( வயது 15), பிரித்திகா (வயது 14) முகிலேஷ் (வயது 12) லோக நாயகி ( வயது 14) ராமகிஷ்ணன் (வயது 14) மற்றும் பொட்டி செட்டிபட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டி வந்த லோகேஷ் (வயது 23) ஆகியோர் அம்மையநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையம், நிலக்கோட்டை அரசு, தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த நிலக்கோட்டை தொகுதி எம். எல். ஏ. அய்யனார் அம்மையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அப்போது தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 10க்கு மேற்பட்டோர் கூட்டமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




