விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மதுரை பசுமலையில் 7.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையை எம்பி மாணிக்கம் தாகூர் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது:
தமிழ்நாட்டினுடைய மிக முக்கிய பிரச்சினையாக ஊழல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு உள்ளது. இதை மையமாக வைத்து விஜய் அவர்கள் தேர்தலில் அறிவித்திருந்தார் சரியாக 30 நாட்களில் அது குறித்து பலமான நடவடிக்கையாக நேரடியாக எஸ்பிக்கு ரிப்போர்ட் பண்ணுகிற ஒரு படையை உருவாக்கி இருக்கிறார். சிங்கப் பெண் என்பது ஒரு முதல் முன்னெடுப்பு நாம் அதற்கு பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். முதல்வர் சொன்னது போல் பல வருடங்களாக முடங்கி இருந்த சிஸ்டத்தை சரி செய்ய நேரம் எடுக்கும் அதற்கான முயற்சிகளை பாராட்டுகிறோம்.

சிங்கப்பெண் படை அறிமுகம் விழாவில் உருவாக்கப்பட்ட ஏ ஐ வீடியோவில் எழுத்து பிழை இருப்பதாக சமூக வலைதளங்களில் எழும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:
எந்த ஒரு முன்னெடுப்புக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும் பார்க்கும் பார்வையை பொறுத்திருக்கிறது. வானதி அக்காவை பொறுத்தவரை அவரது பார்வை குறை கண்டுபிடிக்கும் பார்வை பெண்களின் பாதுகாப்பிற்கு முதல் படியாக பார்க்க வேண்டும் அதை விட்டுவிட்டு ஏ ஐயில் எழுத்து பிழை உள்ளது என்பது குற்றம் சொல்வதற்காக சொல்வது. இது நல்ல நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது நொண்டி சாக்க சொல்வது சரியாக இருக்காது.
அரசு கேபிள்களில் பாலிமர், நியூஸ் தமிழ் ஜனம் டிவி முடக்கப்பட்டது குறித்த கேள்விக்கு:
என்னைப் பொறுத்தவரை பத்திரிக்கை சுதந்திரம் மிக முக்கியமானது பாதுகாக்கப்பட வேண்டும் பழைய அரசுகள் செய்த மிரட்டல்கள் உருட்டல்கள் இருக்காது என்ற நம்பிக்கை தான் மக்கள் ஆதரவளித்துள்ளனர்,இது முதல்வர் கவனத்திற்கு செல்ல வாய்ப்பில்லை ஏனென்றால் அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கை அது சரி செய்யப்பட வேண்டும்.
மூன்று மாதத்தில் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி என முதல்வர் கூறியதாக குறித்த கேள்விக்கு:
பெருந்தன்மையா ஆறு மாசமாக நாங்கள் பேச மாட்டோம் என்று சொன்னார்கள். நம்மளும் பெருந்தன்மை என்று நினைத்து விட்டோம் அதற்கு பிறகு தான் தெரிந்தது பெருந்தன்மையாக இருக்கிறோம் என்றால் அப்படி இருக்க வேண்டும் இல்லையென்றால் முதல் நாளை அடுத்த காலி பண்ணுவோம் என்றால் அப்படி செய்யனும். ஒரு பக்கம் வேற வேஷம் இன்னொரு பக்கம் வேற வேஷம் என்பது சரியாக இருக்காது மக்கள் அறிவாளிகள் தமிழ்நாட்டு மக்கள் சீரியலை விட்டு விட்டு அரசியலுக்கு சென்று விட்டார்கள் அதனால இது மாதிரி தவறுகள் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
புதிய ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதலீடுகள் ஆந்திராவுக்கு சொல்வது குறித்த கேள்விக்கு:
இது ஒரு தவறான பிரச்சாரம் ஆந்திராவிற்கு செல்கிறது என்பது 30 நாட்களில் என்ன முழுசா சென்று இருக்கிறது என்று தெரியவில்லை. தமிழ்நாடு தொழில்துறை அவ்வளவு வலுவிழந்ததில்லை தொழிலை வளர்க்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. விவசாயத்தை காவு கொடுத்து தொழிலை வளர்ப்பது குஜராத் மாடல் தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்று விட்டதாக பிரச்சாரத்தை உருவாக்குகிறார்கள் அது எடுபடாது. எது பெஸ்டோ அது தமிழ்நாடு தேர்ந்தெடுக்கிறது எது லெப்ட் அவுட் அகுதோ அது ஆந்திரா தேர்ந்தெடுக்கிறது.
புதிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அறிவிப்பு எப்போது வரும் என்ற கேள்விக்கு: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக அண்ணன் செல்வப் பெருந்தகை இருக்கிறார் அவருடைய பணி தொடர்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இது குறித்த முடிவை எடுக்கும்.
திமுக இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது தவெக இந்தியா கூட்டணியில் வருகிறதா கேள்விக்கு:
பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி மோடி, அமித்ஷாவுக்கு எதிரான கூட்டணி என்று உருவாக்கப்பட்டது. ஒன்று சேர்ந்து வந்த கட்சிகளை சேர்த்து விட்டோம். அதற்குப் பிறகு யாரெல்லாம் எம்பி வைத்திருக்கிறார்களோ அவர்கள் இந்தியா கூட்டணியில் சேர்த்தோம். சிலர் கூட்டணியை விட்டு வெளியேறினார் அதெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. 25 கட்சிகள் உள்ளது. இந்தியா கூட்டணியை பொறுத்தவரை ஆர் எஸ் எஸ், அமித்ஷா, மோடிக்கு எதிரான கூட்டணி. தவெகாவை பொருத்தவரை எப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகிறார்கள் அவர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுப்போம் தமிழ்நாட்டில் தவெக உடன் பலமான கூட்டணியில் உள்ளோம் எங்களிடம் குழப்பம் இல்லை.
இந்தியா கூட்டணியில் மாநில மாநிலத்திற்கு வித்தியாசம் இருக்கும் டெல்லியில் ஆர்எஸ்எஸையும் அமிர்தாவையும் மோடி எதிர்த்தரளா இந்தியா கூட்டணி இந்த புரிதல் இருந்தால் எளிதாக புரிந்து கொள்ளலாம். கேரளாவில் காங்கிரஸும் மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்டும் அடித்துக் கொள்வோம் ஆனால் டெல்லியில் எங்களுடன் உட்கார்ந்து கொண்டே எங்களை குறை சொல்வார்கள் அதை பொறுமையாக எங்கள் தலைவர்கள் கேட்டுக் கொள்வார்கள் ஜனநாயபூர்வமான அமைப்பு இந்தியா கூட்டணி யாரையும் அவமானப்படுத்துவது கூட்டமே கூட்டாமல் இருப்பது கிடையாது. அடுத்த இரண்டு மாதத்தில் ஐதராபாத்தில் கூட்டம் கூடும். மம்தா பானர்ஜி மட்டும் நடுவுல இந்தியா கூட்டணிக்கு ஒத்துழைக்கவில்லை இப்போது அவர்களே கூட்ட சொல்கிறார்கள் எல்லோரும் சேர்ந்து வந்தால் சந்தோஷம் என்று நினைப்போம்.
தமிழகத்தில் தொடர் மின்வெட்டு குறித்த கேள்விக்கு: மின்சாரத்துறை அமைச்சர் அவருடைய தொகுதியில் இருந்து பேசுகிறோம். மின்வெட்டு சில இடங்களில் நடப்பதாகும் சில காட்சிகளையும் அவர் வெளியிட்டார் அது அதிர்ச்சியான விஷயமாக இருந்தது இப்படி நடவடிக்கை எடுப்பார்களா இவ்வளவு வண்ணத்தோடு திரிவார்களா பதவி போனதுக்கு பிறகு அப்படின்னு சந்தேகமாக உள்ளது ஆனால் இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்க கூடாது பொதுமக்களுக்கு துன்புறுத்தி எந்த அரசியல் கட்சி செயல்பட்டாலும் லாபம் கிடைக்காது உண்மை வெளிவந்து தான் ஆகும் எல்லா இடத்திலும் சிசிடிவி வைத்திருக்கிறார்கள் இப்படிப்பட்ட சைகைகளை செய்பவர்கள் வாய்ப்பு இழந்தவர்கள் இப்படி செய்யக்கூடாது ஆளுங்கட்சி அவமானப்படுத்தும் முயற்சியை நிறுத்திக் கொள்ள வேண்டும் நிறுத்திக் கொண்டால் அடுத்த தேர்தலில் மரியாதை இருக்கும் இல்லை இன்னும் மக்களிடம் கோபம் தான் வரும் என்றார்.




