• Mon. Jul 27th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு கவுன்சிலர் கேள்வி..,

ByS.Ariyanayagam

Jun 5, 2026

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது குறித்து மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ஏற்படும் கடும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து மாமன்ற உறுப்பினர் ஜானகிராமன் கேள்வி எழுப்பியதற்கு மாநகராட்சியின் விளக்கம் அளித்துள்ளது.

மாநகராட்சி ஆணையர் திண்டுக்கல்லின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் நீர் தேக்கத்தில் 2 அடி தண்ணீர்தான் உள்ளது. மேலும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது கரூரிலிருந்து திண்டுக்கல் வரும் பைப் லைனில் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் 2 நாட்களாக திண்டுக்கல்லுக்கு குடிநீர் வரவில்லை.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் TWAD – பைப் லைன்களை மாற்றுவதற்காக ரூ.100 கோடி மதிப்பீட்டில் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது. விரைவில் பணி தொடங்கி முடிவடைந்த பிறகு திண்டுக்கல்லுக்கு சீரான குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.