• Thu. Jun 4th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் முதியோர், மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அனாதைகள் நலஅறக்கட்டளை சார்பாக 34வது ஆண்டு ஏழை முதியோர், ஊனமுற்றோர், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச வேட்டிசேலை, போர்வை, நோட்டுபுத்தங்கள் வழங்கும் விழா தளபதி வீரப்பன் திடலில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு தாசில்தார் வி.பார்த்திபன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த விழாவிற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்(ஓய்வு)கருப்பையா, மாநகராட்சி பொறியாளர் பாஸ்கரபாண்டியன், பேரூராட்சிதுணைத்தலைவர் கார்த்திக், வழக்கறிஞர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முருகாண்டி வரவேற்றார். இதில் முதியோர், மாற்றுதிறனாளிகளுக்கு போர்வை, வேட்டி சேலைகளும், மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தங்களும் 650 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இதில் கேசவன், முன்னாள்கவுன்சிலர் மகாசரவணன், செல்வம், நாகராஜ், யுவராஜ்,கோமதி,மாலதி உள்பட பலர்கலந்துகொண்டனர். முடிவில் விஜயலெட்சுமி நன்றி கூறினார். இதன் ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ஏ.வி.பிரிதிவிராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.