மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சூலப்புரம் ஊராட்சிக்குட்பட்ட உலைப்பட்டியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.,

இந்த அங்கன்வாடி மையத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு 1 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பீட்டில் பராமரிப்பு செய்திருந்த நிலையில் இன்று திடீரென இம்மைய கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,

கோடை விடுமுறைக்கு பின் இன்று தான் குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு வந்திருந்த நிலையில் 11 குழந்தைகள் இருக்கும் போதே கட்டிடத்தின் ஒரு பகுதியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.,
நல்வாய்ப்பாக மையத்தில் இருந்த குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத சூழலில், சமீபத்தில் பராமரிப்பு செய்யப்பட்ட அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது தொடர்பாக சேடபட்டி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களும், எழுமலை காவல் நிலைய போலீசாரும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,




