• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பள்ளிகள் திறப்பு மாணவர்கள் உற்சாகம்..,

ByS.Ariyanayagam

Jun 4, 2026

கோடை விடுமுறை முடிந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். கடுமையான கோடை வெயில் காரணமாக ஜூன் 1-ல் திறக்கப்படுவதாக இருந்த பள்ளிகள், சில நாட்கள் தள்ளிவைக்கப்பட்டு இன்று முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிக்குத் திரும்பியுள்ள மாணவர்கள் வகுப்புகள், பாட புத்தகங்கள் இன்றே வழங்கப்படுகின்றன. திண்டுக்கல் செவாலியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை ஆசிரியர்கள் மலர் தூவி வரவேற்றனர்.

இதில் பள்ளி தாளாளர் சேசுஆரோக்கியம், நிர்வாக அதிகாரி ஜான்பிரிட்டோ, அருள்தந்தை ஆல்பர்ட் ஜேம்ஸ்,முதல்வர் ஞானசீலா உட்பட அனைத்து ஆசிரியர்களும் மலர்களை தூவி மாணவர்களை வரவேற்றனர். பின்பு மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.