• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

புதிதாக பொறுப்பேற்ற மதுரை ஆட்சியர் ஆகாஷ் திடீர் ஆய்வு..,

ByP.Thangapandi

Jun 4, 2026

மதுரை மாவட்டத்தின் ஆட்சியராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்., இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வட்டாச்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு செய்தார்.,

முன் அறிவிப்பின்றி தீடீரென நடைபெற்ற இந்த ஆய்வில் இ சேவை மையம், வட்டாச்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும், அலுவலக செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.,

இந்த ஆய்வின் போது உசிலம்பட்டி சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமாரும் உடனிருந்து,
பொதுமக்களிடம் அவர்கள் கொண்டு வந்திருந்த கோரிக்கை மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டனர்., மாவட்ட ஆட்சியரின் இந்த திடீர் ஆய்வு அரசு அலுவலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.,