நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 80 இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் வென்றிருந்த நிலையில், மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 20 பேர் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.

நேற்று மம்தா பானர்ஜி நடத்திய தர்ணா போராட்டத்தில் 8 எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்றனர்; 29 எம்பிக்களில் 6 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
மம்தா பரிந்துரைத்த சோபன் தேவ் நிராகரிக்கப்பட்ட நிலையில் திரிணாமூல் காங்கிரஸில் இருந்து மம்தாவால் நீக்கப்பட்ட ரிதபிரதா பானர்ஜி 58 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் எதிர்க்கட்சித் தலைவராகிறார்.
சட்டமன்ற தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்டுள்ளது.



