• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மின் கம்பத்தில் மோதிய கார் ..,

ByK Kaliraj

Jun 2, 2026

தென்காசி பகுதியை சேர்ந்த வேல்ராஜ் (வயது 45) இவர் தனக்கு சொந்தமான காரில் உறவினரை சந்திப்பதற்காக தாயில்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது தனியார் பல்க் அருகே வந்தபோது திடீரென கார் நிலை தடுமாறியதில் பள்ளத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி கார் நின்றது.

அதிர்ஷ்டவசமாக வேல்ராஜ்க்கு ஏதும் காயம் ஏற்படவில்லை. கார் மோதியதால் மின்கம்பம் சேதமடைந்தது. தகவல் அறிந்த வெம்பக்கோட்டை துணை மின் நிலையத்திலிருந்து பணியாளர்கள் உடனடியாக வந்து சேதமடைந்த மின்கம்பத்தை சரி செய்தனர்.