• Sun. Jul 19th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் நெல்மணிகள் சாய்ந்து சேதம்..,

ByP.Thangapandi

Jun 2, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாட்டாமங்கலம், திடியன், வாலாந்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதியில் நேற்று பலத்த சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.,

இந்நிலையில் இதில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிகள் மீது பாதாமரங்கள் முறிந்து நெற்பயிர்கள் மீது விழுந்து சேதம் அடைந்துள்ளது.,

மேலும் இப்பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர்களில் விவசாயிகள் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மீது பலத்த சூறைக் காற்றுடன் கூடிய கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் விளைநிலங்களிலேயே சாய்ந்து சேதமடைந்துள்ளது.,

மேலும் விவசாயிகள் 1 ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்து பயிரிடப்பட்டிருந்த நெற்கதிர்கள் சேதம் அடைந்துள்ளதால் இன்னும் ஒரு சில நாட்கள் மழை பெய்தால் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கிறனர்.,

மாவட்ட நிர்வாகம் விரைந்து பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.,