• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பில் மணமாலை நிகழ்ச்சி..,

ByKalamegam Viswanathan

Jun 1, 2026

மதுரையில் நடைபெற்ற பிள்ளைமார், முதலியார் வரன்களுக்கான இலவச மணமாலை நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான வரன்கள் பங்கேற்றனர்.

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் (எய்ம்பா), சமுதாய மேம்பாடு, கல்வி, வேலைவாய்ப்பு, மணமாலை, பொருளாதார முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றத்திற்காக சுய தொழிலுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், சட்ட உதவிகள் என பல்வேறு சமூக வளர்ச்சிக்கான செயல்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் இலவச மணமாலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அமைப்பின் பாண்டிய மண்டலம் – மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில், மதுரை மணமாலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டதை தொடர்ந்து, 7வது முறையாக மதுரையில் மணமாலை நிகழ்வு நடந்தது. தல்லாகுளம், லட்சுமி சுந்தரம் ஹாலில் காலை 8 மணிக்கு தொடங்கிய நிகழ்வை, மாநில நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். நிகழ்வில், 500க்கும் மேற்பட்ட வரன்கள் பதிவு செய்து கொண்டனர்.

இம்பா நிறுவன தலைவர் செவாலியே அருணாசலம் முதலியார், எய்ம்பா நிறுவன தலைவர் ஓம்சக்தி ஆர்.ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.கே. ரகுராம், பொருளாளர் எம்.ரவி முதலியார், துணைத்தலைவர் டி. ராமச்சந்திர குமார் தலைமை வகித்தனர்.

மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மட்டுமின்றி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஓசூர் என தமிழ்நாடு முழுவதும் இருந்து பல வரன்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். டாக்டர், இன்ஜினியர், திரைத்துறையினர், தொழிலதிபர்கள் உட்பட பல்வேறு வரன்கள் தங்களுக்கான ஜோடிகளைத் தேடி பதிவு செய்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டது.

நிகழ்வில் செங்குந்தர் மஹாஜன சங்கம் கே.பி.கே.செல்வராஜ், ஆறுநாட்டு வெள்ளாளர் சங்கம் செல்வராஜ், வெள்ளாளர் முன்னேற்ற கழகம் அண்ணா சரவணன், போத்தீஸ் உரிமையாளர் முருகேஷ், மஹன்யாஸ் ஜவுளி நிறுவன உரிமையாளர் கணேசன், விஷால் டி மால் இளங்கோவன், கோபி மெட்டல் எஸ்.கோபி, முத்து மார்க் உரிமையாளர் முத்துக்குமார், திறனவு நர்சிங் அகாடமி சேர்மன் சீனிவாசன், ஜி ஜி குழும உரிமையாளர்கள் வெங்கடேசன், ஆதிலிங்கம், பாண்டியன் ஊறுகாய் கந்தசாமி, பாண்டியன் அப்பளம் உரிமையாளர் திருமுருகன், ஜெய ஜோதி ஃபுட்ஸ் உரிமையாளர் ஜெயசங்கர், எய்ம்பா அமைப்பின் மாநில, மண்டல, மாவட்ட, இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

எய்ம்பா சங்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அரசு பரமேஸ்வரன், செய்தி தொடர்பாளர் மு.ஆதவன் நிகழ்வை தொகுத்து வழங்கினர்.

விழா அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். அடுத்த மணமான நிகழ்ச்சி, பெங்களூருவில் நடத்தப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.