• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மதுரை திருநகரில் ஹாக்கி விளையாட்டுப்போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி..,

ByKalamegam Viswanathan

Jun 1, 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகர் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற ஆக்கி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு பொருட்கள் வாங்கும் நிகழ்ச்சியில் திருச்சி மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு பொருட்கள் கேடயம் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும் போது: ஆரோக்கியமான நாடு உருவாக விளையாட்டு துறை மிகவும் முக்கியம். மருத்துவர் அறிவுறுத்துவதற்கு முன்பே கிரவுண்டுக்கு சென்றால் நமக்கு ஆரோக்கியம் மருத்துவர் சொன்னதுக்கு பின்னர் கிரவுண்டுக்கு சென்றால் மருத்துவருக்கு ஆரோக்கியம் என்ற ஐடியாவை நம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நேற்று தான் இந்த மைதானத்தை அமைச்சர் நிர்மல் குமார் ஆய்வு செய்து விட்டு சென்றுள்ளார் கேலரி அமைத்து தருவதாக சொல்லி இருக்கிறார். நம்முடைய விளையாட்டுத் துறை அமைச்சர் யாரு? என்று எம்பி சில நொடிகள் தயங்கிய நிலையில் ‌ ஆதவ் என்றவுடன் அருகில் இருப்பவர் அதனை உறுதிப்படுத்தியவுடன் பேசிய எம்.பி ஆதவ் அர்ஜுனா அவரும் பேஸ்கட்பால் பிளேயர் ஸ்போர்ட்ஸ் பர்சனாக இந்த மாதிரி விளையாட்டுகளுக்கு சப்போர்ட் பண்ணுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு எம் பி என்ற முறையில் அவரை சந்தித்து இது சம்பந்தமாக பேசுவேன்

கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டுவது விவகாரம் கொடுத்த கேள்விக்கு அதைப்பற்றி இங்கே பேச வேண்டிய சூழ்நிலை இல்லை என்று பதில் அளித்தார்.

அனைத்து பகுதிகளிலும் மைதானம் அமைக்கும் பணியை இந்த அரசு முன்னெடுக்கும். அனைத்து சங்கங்களும் இதற்காக அழுத்தம் கொடுக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் திலக் கிறிஸ்டோபர் கூறினார்.